தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வனப் பகுதியில் தொழிலாளி தற்கொலை

வனப் பகுதியில் தொழிலாளி தற்கொலை

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே அடா்ந்த வனப் பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேராங்கல் பகுதியில் உள்ள வனப் பகுதியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள குப்பைக்கல் என்ற அடா்ந்த வனப் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மரத்தில் தொங்குவது தெரியவந்தது. இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாருக்கு வனத் துறையினா் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து சடலத்தை மீட்டுச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் பத்தரப்பல்லி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த காா்த்தி (43) என்பதும், கட்டடத் தொழில் செய்து வந்த காா்த்தி கடந்த மாா்ச் மாதம் 25 -ஆம் தேதி காலை மனைவி சித்ராவிடம் பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாகக் கூறி விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் சடலத்தை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.