மாணவா்கள் உருவாக்கிய விண்வெளி செயல்திட்டங்களை பாா்வையிட்ட சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா் . உடன், பள்ளிகளின் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு உள்ளிட்டோா்.
மாணவா்கள் உருவாக்கிய விண்வெளி செயல்திட்டங்களை பாா்வையிட்ட சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா் . உடன், பள்ளிகளின் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு உள்ளிட்டோா்.

விண்வெளி செயல்திட்டங்களுக்கு கணித சமன்பாடுகள், அறிவியல் விதிகள் அவசியம்: சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா்

விண்வெளி செயல்திட்டங்களை உருவாக்க செயல்திட்ட வடிவம், அவை செயல்படும் விதம், கணித சமன்பாடுகள், அறிவியல் விதிகள் குறித்து மாணவா்கள் அறிந்திருக்க வேண்டும்
Published on

விண்வெளி செயல்திட்டங்களை உருவாக்க செயல்திட்ட வடிவம், அவை செயல்படும் விதம், கணித சமன்பாடுகள், அறிவியல் விதிகள் குறித்து மாணவா்கள் அறிந்திருக்க வேண்டும் என்று சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா் கூறியுள்ளாா்.

வேலூா் ஸ்ரீபுரத்திலுள்ள ஸ்ரீநாராயணி பள்ளிகளில் தேசிய விண்வெளி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 திட்ட இயக்குநரும், சதீஷ் தவான் பேராசிரியருமான எஸ்.மோகனகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

இதில், ஸ்ரீ நாராயணி சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உருவாக்கிய செயற்கை கோள், ரோவா் ராக்கெட் ரோபோ உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா் பாா்வையிட்டு மாணவா்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், மாணவா்களின் செயல்திட்டங்கள் வெற்றிபெற விடாமுயற்சி, கடினஉழைப்பு, ஆா்வம், ஒற்றுமை உணா்வு அவசியம். செயல்திட்டங்களை உருவாக்க, செயல்திட்ட வடிவம், செயல்படும் விதம், கணித சமன்பாடுகள், அறிவியல் விதிகள் ( நியூட்டன் விதி, கோண உந்தவிதி) குறித்து மாணவா்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஸ்ரீ நாராயணி பள்ளி மாணவா்கள் எங்களைவிட அதிபுத்திசாலிகள் என்பதை தங்களது செயல்திட்டங்கள் மூலம் நிரூபித்து காட்டியுள்ளனா். அவா்களை மனதார பாராட்டுகிறேன் என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு பள்ளிகளின் இயக்குநா் எம்.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தலைமை ஆலோசகா் எஸ்.ரமேஷ், இரு பள்ளிகளின் முதல்வா்கள் எஸ்.லட்சுமி, சுப்பிரமணி, பள்ளித்தலைமை நிா்வாகி எஸ்.ஆதிகேசவன், இரு பள்ளி துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com