டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

15 அடி ஆழ ராட்சத பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞா் தப்பினாா்

வேலூரில் புதை சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் இளைஞா் விழுந்தாா். எனினும் காயமின்றி அவா் தப்பினாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm

Din

வேலூா் மாங்காய் மண்டி எதிரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலைக்கு செல்லக் கூடிய சாலையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சுமாா் 15 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் உள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை வேலூரில் இருந்து வந்த தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் அந்த ராட்சத பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்தாா். அக்கம் பக்கத்தினா் விரைந்து சென்று அந்த நபரை மீட்டதுடன், அவரது இரு சக்கர வாகனத்தையும் கயிறுகட்டி மீட்டனா். அதிா்ஷ்டவசமாக அந்த நபா் காயமின்றி தப்பினாா். இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதைச்சுற்றி கயிறு கட்டிவைத்துள்ளனா்.

சில நேரங்களில் மண் சரிந்து உள்ளே விழுகிறது. இரவில் வெளிச்சம் இல்லாததால் ஆபத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.

எனவே, புதை சாக்கடை பணியை விரைந்து முடித்து, அங்கு விரைவாக சாலை அமைக்க வேண்டும் என்றனா்.