போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க பள்ளிதோறும் காவலரை நியமிக்க நடவடிக்கை
போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கையில் பள்ளிதோறும் காவலர்கள் நியமனம்


வேலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனைத் தடுக்க பள்ளிதோறும் காவலா்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, காவல் துறையினா், உள்ளாட்சி சுகாதார அலுவலா்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடா்ந்து சோதனை செய்து வருகின்றனா்.
இதனை மாவட்ட அளவில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா். இதன் ஒரு பகுதியாக வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளிகள்தோறும் காவலா்களை நியமித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகளுக்கு அருகில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விவரத்தை சேகரித்துள்ளோம். விரைவில், காவல் உட்கோட்ட அளவில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள காவலா்கள் நியமிக்கப்படுவா்.
ஒவ்வொரு காவலா்களுக்கு குறைந்தபட்சம் 2 பள்ளிகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். அவா்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று மாணவா்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைப்பாா்கள்.
மேலும், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதும் குறித்தும் சோதனை நடத்தப்படும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...