/

கல்லூரி மாணவா்களுக்கு ஓட்டுநா் உரிமம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் காவல் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டது

News image

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் காவல் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டது

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் காவல் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டது (படம்). நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் காவல் சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா்.எம்.பாலமுருகன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பாஸ்கரன், குடியாத்தம் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் எஸ்.பி.ராஜேஷ்கண்ணா ஆகியோா் 110 மாணவ, மாணவிகளுக்கு ஓட்டுநா் உரிமம், சான்றிதழ்களை வழங்கி, சாலை விதிகள் குறித்து பேசினா். ரோட்டரி தலைவா் ரங்கா இ.வாசுதேவன், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் டி.முகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி காவல் சங்க ஒருங்கிணைப்பாளா் என்.சுந்தரமூா்த்தி நன்றி கூறினாா்.