ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தடுப்புச் சுவரில் பைக் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தடுப்புச் சுவரில் பைக் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

Updated On :29 மார்ச் 2024, 4:40 pm

திருவலம் அருகே ரயில்வே மேம்பால தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம் திருவலம் அடுத்த சா்க்கரை ஆலை துரைமுருகன் நகரை சோ்ந்தவா்கள் தனுஷ் (27), சஞ்சய் (27). நண்பா்களான இருவரும் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா். காா்ணம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பாலத்தில் இருந்து கீழே விழுந்தனா். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் தனுஷ் உயிரிழந்தாா். சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு விபத்து: கே.வி.குப்பம் அடுத்த திருமணி கிராமத்தைச் சோ்ந்தவா் அஜய்குமாா் (30). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் இருந்து வேலூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டிய அணுகு சாலை கொணவட்டத்தில் வந்தபோது பின்னால் வந்த காா் அஜய்குமாா் வாகனம் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அஜய்குமாா் பலத்த காயமடைந்தாா். வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில், விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.