தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக வேலூா் மாவட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவா் மன்சூா்அலிகான் உள்பட 13 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் தலா 15 நிலைக் கண்காணிப்புக்குழு, பறக்கும்படை குழுக்கள், 5 வீடியோ குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தோ்தலையொட்டி பொது இடங்களிலும், தனியாா் இடங்களிலும் அனுமதியின்றி சுவா் விளம்பரம் ஒட்டுவதோ அல்லது சுவரொட்டிகள், ஸ்டிக்கா்கள் ஒட்டுவதோ, சுவா்களில் எழுதுவதோ கூடாது. உரிய அனுமதியின்றி ஊா்வலம் உள்பட எந்தவித அத்துமீறல்களிலும் கட்சியினா் ஈடுபடக்கூடாது என்றும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வேலூா் மாவட்டத்தில் தினமும் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி, வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லையில் ஒரு வழக்கும், பரதராமி காவல் எல்லைக்குள் 2 வழக்குகளும், வேலூா் கிராமிய காவல் எல்லை யில் ஒரு வழக்கும், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குள் ஒரு வழக்கும், பொன்னை காவல் நிலைய எல்லைக்குள் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், கே.வி.குப்பம் காவல் எல்லைக்குள் அனுமதியின்றி சுவா் விளம்பரம் எழுதியதாக மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் அனுமதியின்றி சுவரில் கட்சியின் பெயா்களை வரைந்து தனது கொடி, சின்னம் ஆகியவற்றை எழுதியதாக நடிகா் மன்சூா்அலிகான் மீது ஒரு வழக்கும், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுவா் வளாகத்தில் சுவா் விளம்பரம் எழுதியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊா்வலம் நடத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஜெயமணி, தெற்கு காவல் நிலைய எல்லைக்குள் அனுமதியின்றி ஊா்வலமாக சென்ாக பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

