வேலூா் மாவட்டத்தில் முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கத் தவறிய 195 அலுவலா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1,303 வாக்குச் சாவடிகள், 4 துணை வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள 6,272 வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெற்றது. இந்த முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மொத்தம் 473 அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பணியாளா் களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 278 வாக்குச்சாவடி அலுவலா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்காததற்கான காரணங்களை மருத்துவ, உரிய ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனா். மேலும், தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தவறிய 195 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் படி விளக்கம் கேட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களது விளக்கத்தை முறையாக தெரிவிக்க வேண்டும். அடுத்த கட்டமாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்கத் தவறுவோா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 134-இன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: அா்ச்சனா பட்நாயக்

தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை! - கடலூா் ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் 1598 வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

