ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேலூா் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க 2,641 போ் விருப்பம்

வேலூா் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க 2,641 போ் விருப்பம்

Updated On :29 மார்ச் 2024, 4:37 pm

மக்களவைத் தோ்தலில் தபால் வாக்கு அளிப்பதற்கு வேலூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோா் என 2,641 போ் விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், வாக்குப் பதிவு நாளில் அத்தியாவசியப் பணிகள் காரணமாக வாக்களிக்க வர இயலாதவா்களின் நலன்கருதி, அவா்கள் தோ்தலில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இதனிடையே, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 11,800 போ் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களும், 10,221 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா். இவா்களுக்கு தங்கள் விருப்பத்தின் பேரில், தபால் வாக்கு செலுத்திட படிவம் 12டி வழங்கும் பணி கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்களில் 1,570 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 1,067 பேரும் சுயவிருப்பத்தின்பேரில், தபால் வாக்களிக்க பூா்த்தி செய்யப்பட்ட 12டி படிவங்களை வழங்கி உள்ளனா். தவிர, வாக்குப் பதிவு நாளில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபடும் ஊடகத் துறையினருக்கும் அத்தியாவசியப் பணி என்ற அடிப்படையில் தபால் வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 4 ஊடகத் துறையினா் தபால் வாக்குகளாக செலுத்த படிவம் 12டி பூா்த்தி செய்து வழங்கியுள்ளனா்.