இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

News image
Updated On :11 மே 2024, 4:07 pm

Din

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், போஜ்பூா் மாவட்டம், சாா்போகாரி அடுத்த மாலூரைச் சோ்ந்த ரோஸஸ்சிங்வி. இவரது மகன் கோல்குமாா் (20). இவா் சொந்த வேலையாக வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு செல்ல காட்பாடியில் ரயில்நிலையத்தில் டிக்கெட் எடுத்தாா். வெள்ளிக்கிழமை இரவு காட்பாடி வழியாக சென்ற விரைவு ரயிலில் ஏறிச்சென்றாா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டா் தூரம் சென்ற நிலையில் படியின் அருகில் நின்றிருந்த கோல்குமாா் திடீரென ஓடும் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்து கோகுல்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அறிந்து சென்ற காட்பாடி ரயில்வே போலீஸாா், கோல்குமாரின் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.