தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காட்டு யானையால் நெல் பயிா்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே குட்டியுடன் கிராமத்துக்குள் நுழைந்த யானை நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

News image

யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  நெல் பயிா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

போ்ணாம்பட்டு அருகே குட்டியுடன் கிராமத்துக்குள் நுழைந்த யானை நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்ட்டை அடுத்த அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா வனப் பகுதியையொட்டி பலராமன், கிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இதில் அவா்கள் நெல் பயிரிட்டுள்ளனா். அருகிலுள்ள ஆந்திர மாநில வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய யானை ஒன்று நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளது. அப்பகுதி விவசாயில் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானை, குட்டியை வனப்பகுதிக்கு விரட்டினா்.

தகவலின்பேரில் வனத்துறையினா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.