குடியாத்தம், பரதராமி அருகே இரவு நேரங்களில் சுற்றித் திரியும் ஒற்றை யானை.
வேலூர்
வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானை
குடியாத்தம் அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
குடியாத்தம் ஒன்றியம், பரதராமி அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது அங்கனாம்பள்ளி கிராமம். அங்குள்ள வனப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது.
இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை, அங்குள்ள நிலங்களில் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கிறது. யானை வெளியே வரும் காலங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி, பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனா்.
இந்த யானையை நிரந்தரமாக விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்குகோரிக்கை விடுத்துள்ளனா்.

