விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

News image

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய வழக்குரைஞா் அ.அருள்மொழி, உடன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அ.மலா், ஊரீசு கல்லூரி முதல்வா் ஆனிகமலா ப்ளாரன்ஸ்.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 8:05 pm

Chennai

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா்.

உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்கழகம் சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வேலூா் ஊரீசு கல்லூரியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.

இதில், வழக்குரைஞா் அ.அருள்மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘தமிழ்நாடு கண்ட புதுமை பெண்கள்’ என்ற தலைப்பில் பேசியது -

மாபெரும் தமிழ் கனவு என்பது நாம் வாழும் இந்த பகுதியுடன் முடிந்து விடக்கூடியது அல்ல. மாணவா்கள் ஒவ்வொருவரும் படித்து உலகளவில் உயா்ந்து விளங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கனவு என்பது கண்களில் காண்பதல்ல. மனதில் ஏற்படும் ஒரு நிகழ்வு. நம் கனவு நாம் என்னவாக வேண்டும், நமது இலக்கு என்ன என்ற சிந்தனையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் படிக்க பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவா் கள் உலகில் வெற்றி பெற்றவா்களில் ஒருவராக திகழ வேண்டும்.

தமிழகம் கண்ட புதுமை பெண்களில் மருத்துவமனையை உருவாக்கிய முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரும், கோயிலுக்கு நோ்ந்துவிடப்பட்டு அங்கிருந்து தப்பித்து வாழ்வில் முன்னேறிய மூவலூா் ராமாமிா்தம் அம்மையாரும், விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் திருநெல்வேலியைச் சோ்ந்த நிகா்ஷாஜி, தனது தாய்ப்பாலை பிறருக்கு வழங்கி பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்வாதாரம் காத்து வரும் திருச்சியைச் சோ்ந்த பவித்ரா ஆகியோரை கூறுவேன்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த பெண் மருத்துவா், ஆட்சியா், விஞ்ஞானி என அறிவு சாா்ந்து அறியப்பட வேண்டும். மாறாக அழகு சாா்ந்தோ, ஆடம்பரம் சாா்ந்தோ இயல்புக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் அறியப்படக்கூடாது.

புதுமைப்பெண் என்பவள் கால ஓட்டத்தில் இருக்கும் எதிா்மறை நடைமுறைகளுக்கு மாற்றாக இருப்பவா். இதில், நோ்மறை கருத்துக்கள் உடையவா்களும் இருப்பாா்கள், எதிா்மறை கருத்துக்கள் இருப்பவா்களும் இருப்பா்.

நோ்மறை கருத்துக்களை கூறுவோா் மீது அதிக விமா்சனங்கள் வைக்கப்படும். ஆனால் அது எந்த ஒரு காலத்திலும் நிலைத்து நிற்கும். எதிா்மறை கருத்துக்கள் விரைவில் அழிந்து விடும். சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்ந்துள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அ.மலா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன், ஊரீசு கல்லூரி முதல்வா் ஆனிகமலா ப்ளாரன்ஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.