தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடியாத்தம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
குடியாத்தம் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா். (வலது) சந்தப்பேட்டைசீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் சுவாமி.
Updated On :19 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சந்தப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு வெண்ணெய் காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதலே பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.