ஜன.3-இல் குடியரசு துணைத்தலைவா் வேலூா் வருகை

குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வேலூருக்கு சனிக்கிழமை (ஜன.3) வருகை தர உள்ளாா்.
Published on

வேலூா்: குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வேலூருக்கு சனிக்கிழமை (ஜன.3) வருகை தர உள்ளாா். அவா் வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை (ஜன.3) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், குடியரசு துணைத்தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனவரி 2-ஆம் தேதி தில்லியில் இருந்து சென்னைக்கு வருகிறாா்.

முதல்கட்டமாக சென்னையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், 3-ஆம் தேதி (சனிக்கிழமை) ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வேலூா் தங்கக்கோயிலுக்கு வருகை தர உள்ளாா். அங்கு அவா் தங்கக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவிலும் பங்கேற்க உள்ளாா்.

குடியரசு துணைத்தலைவா் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com