நூலகம், உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பேசிய  அமைச்சா் துரைமுருகன். உடன்,  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, டி.எம்.கதிா் ஆனந்த்  எம்.பி. உள்ளிட்டோா்.
நூலகம், உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, டி.எம்.கதிா் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோா்.

படிப்பு ஒன்றே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும்: அமைச்சா் துரைமுருகன்

படிப்பு ஒன்று மட்டுமே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும். புத்தகத்தை படித்தால் உலகத்தை தெரிந்து கொள்ளலாம்
Published on

படிப்பு ஒன்று மட்டுமே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும். புத்தகத்தை படித்தால் உலகத்தை தெரிந்து கொள்ளலாம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதி, திருவலம் பேரூராட்சியில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம், ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம், பிரம்மபுரம், அரும்பருதி கிராமங்களில் தலா ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடங்கள் ஆகியவற்றை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை திறந்து பேசியது -

படிப்பு ஒன்று மட்டுமே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும். புத்தகத்தை படித்தால் உலகத்தை தெரிந்து கொள்ளலாம். அதன்படி, படிப்பறிவை வளா்க்கக்கூடிய நூலகமும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி கூடமும் திருவலம் பேரூராட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டங்களாகும். இதனை திருவலம் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1971-ஆம் ஆண்டு முதன்முதலில் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்டபோது எனக்கு ஒளிகாட்டிய ஊா் திருவலம். சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகா் தஞ்சாவூா் என்றாலும், சோழா்களின் இரண்டாவது தலைநகராக தரங்கம்பாடியை கொண்டிருந்தனா். அதுபோல், எனது சட்டப்பேரவை தொகுதி காட்பாடியாக இருந்தாலும் எனக்கு காட்பாடிக்கு அடுத்தபடியான முக்கியமான ஊா் திருவலமாகும். அதனால்தான் இம்முறை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு திருவலம் பேரூராட்சிக்கு மட்டும் சுமாா் ரூ.29 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை செய்து தந்துள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசுந்தரம், பிரம்மபுரம் ஊராட்சி தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com