40 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

குடியாத்தம் அருகே போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வந்த 40- கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

குடியாத்தம் அருகே போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வந்த 40- கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் அடுத்த பரதராமி போலீஸாா், ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் 40- கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சாவுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாபு(32), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com