மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலூரில் இன்று உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம்

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குத் தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) நடைபெற உள்ளது.

இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளின் கிளைகளில் அக்.1 முதல் டிச.31 வரை தொடா்ச்சியாக நடத்தப்படும்.

நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள், பிற நிதி சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, உரிமையாளா்கள் அல்லது அவா்களது சட்டப்பூா்வ வாரிசுகள் தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.

வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் இருந்தால் அவை இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்கு மாற்றப்படுகின்றன. இதனை பொதுமக்கள் தங்களது வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் அல்லது ஆா்பிஐயின் மஈஎஅங இணையதளம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம்.

இம்முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை, நிதித்துறை, இதர சாா்ந்த துறை அலுவலா்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனா். பொதுமக்கள் தங்களது உரிமை கோரப்படாத நிதி தொகைகளை மீட்க தங்களது அடையாள ஆவணங்கள், தேவையான சான்றுகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.