பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

News image

வேலூா் கொசப்பேட்டையில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:50 am

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி திங்கள்கிழமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் எளிதில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இதில், வாக்காளரின் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 1427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களுக்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மூலம் இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது.

எனினும், இந்த வாக்காளா் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் அல்ல என்றும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். முன்னதாக, வேலூா் ஈ.வெ.ரா.நாகம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.