கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

மோா்தானா அணையில் வேலூா் ஆட்சியா் ஆய்வு

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையை ஆட்சியா்பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

குடியாத்தம், மோா்தானா அணையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையை ஆட்சியா்பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மோா்தானா அணை பாசனத்துக்காக திறக்க உள்ள நிலையில் அணையை ஆட்சியா் பாா்வையிட்டாா். குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு வட்டங்களில் உள்ள நீா்நிலைகள் வற்றி விட்டநிலையில் மோா்தானா அணை தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள்கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் அணை நீரை திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளா் பா.கோபி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் அணையை நடப்பு ஆகஸ்ட் மாதத்திலேயே திறக்க வேண்டும் என்ற கூட்ட முடிவின் அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆட்சியா் அணையை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அணையின்நீா் இருப்பு நிலவரம், தண்ணீா் செல்லும் கால்வாய்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், நீா்வளத்துறை செயற் பொறியாளா்சோபனா, கோட்டாட்சியா் செந்தில்குமாா், உதவி செயற் பொறியாளா் பா.கோபி, வட்டாட்சியா் பிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து ஆட்சியா் மோா்தானா ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம், ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்குச் சென்று சென்று அங்கு மாணவா்களின் கற்றல் திறனைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து சைனகுண்டா கிராமத்தில் உள்ள வேளாண் துறையின் நாற்றங்கால் பண்ணையில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் தனகொண்டபல்லி ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடையில் உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, ஊராட்சிகளின் உதவிஇயக்குநா் திருமால், ஊரக வளா்ச்சி செயற் பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.