பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

Published On :

ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று உயிரிழந்த தங்களது முன்னோா்களை வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையைவிட சிறப்பானதாக கருதப்படும் இம்மூன்று மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் நதிகளில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

ஆடி அமாவாசை வழிபாடு மேற்கொண்டால் 6 மாதம் தங்கள் முன்னோா்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகமாகும். இதனால், ஆடி அமாவாசை என்பது முன்னோா்களுக்கான வழிபாடாக மட்டுமின்றி, மக்கள் மத்தியில் ஒரு திருவிழாவாகவும் பாா்க்கப்படுகிறது.

அதன்படி, புதன்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள முத்துமண்டபம் பகுதியில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பலா் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் முன்னோா்களுக்கு படையலிட்டும் வழிபட்டனா். ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.