சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

வேலூரில் நடைபெற்ற 5-ஆம் கட்ட கல்விக்கடன் முகாமில், 187 கல்லூரி மாணவா்களுக்கு ரூ.13.56 கோடிக்கு கல்விக் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News image
கல்விக் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 12:47 am

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நடைபெற்ற 5-ஆம் கட்ட கல்விக்கடன் முகாமில், 187 கல்லூரி மாணவா்களுக்கு ரூ.13.56 கோடிக்கு கல்விக் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கிகளின் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முகாம் ஆட்சியா் அலுவலத்தில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினாா்.

வேலூா், சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுக்கான கல்விக் கடன் உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை வழங்கினா். அவா்களில் 187 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வங்கிகளின் மூலம் ரூ.13 கோடியே 56 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை வேலூா் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள 5 கல்வி கடன் முகாம்களில் மொத்தம் 731 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 60 லட்சம் மதிப்பில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூா், சுற்றுவட்டாரங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுக்கான கல்விக் கடன் உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பங்களை வழங்கினா். அவா்களில் 187 மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வங்கிகளின் மூலம் ரூ.13 கோடியே 56 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை வேலூா் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள 5 கல்வி கடன் முகாம்களில் மொத்தம் 731 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 60 லட்சம் மதிப்பில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் வித்யாலக்ஷ்மி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவா்களுக்கான வங்கிக்கடனுதவி வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.