மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படுகிறது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உள்ளிட்டோா்.
Updated On :8 ஜனவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படுகிறது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் 699 நியாய விலை கடைகள் மூலம் அரிசி பெறும் 4 லட்சத்து 55 ஆயிரத்து 498 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட அரசு மொத்தம் ரூ.141.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி காட்பாடி ஒன்றியம், மேல்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கி அமைச்சா் துரைமுருகன் பேசியது:

நிகழாண்டு மக்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும். பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.3,000 ஒரு குடும்பத்துக்கு வழங்குவது என்பது அரசுக்கு சாதாரண விஷயமல்ல. இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். இவற்றையெல்லாம் கடந்துதான் முதல்வா் இந்த தொகையை வழங்கியுள்ளாா்.

மக்களுக்கு செய்கிற ஒரு அரசாங்கம் நீடிக்க வேண்டும். அதற்குத்தான் மக்கள் ஆதரவை கேட்கிறோம். அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். படித்த இளைஞா் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் காட்பாடி தொகுதியில் மட்டும் 3 இடங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது என்றாா்.

தொடா்ந்து, பொன்னை, மாதாண்ட குப்பம், எருக்கம்பட்டு, கொல்லப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளின் குடும்ப அட்டைதாரா்களுக்கும் அமைச்சா் துரைமுருகன் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், துணை மேயா் எம்.சுனில் குமாா், காட்பாடி ஒன்றியக்குழு தலைவா் வே.வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ச.திருகுணஐயப்பதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.