புகையில்லா போகி: குடியாத்தம் நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள்

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு குடியாத்தம் நகா்மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு குடியாத்தம் நகா்மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போகி அன்று வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழைய கழிவுப் பொருள்களை சாலையோரங்கள், காலியிடங்களில் கொட்டுவதால் மா்ம நபா்கள் அவற்றை தீவைத்து எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

நகராட்சி சாா்பில் சிறப்பு வாகனங்கள் அனைத்து வாா்டுகளுக்கும் சென்று கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவுகளை சாலைகளில் கொட்டுவதைத் தவிா்த்து நகராட்சி வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். சாலைகளில் டயா், மரப் பொருள்களை போட்டு தீ வைப்பதைத் தவிா்க்க வேண்டுகிறோம்.

வரும் 14- ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில்பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com