புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on

திருவள்ளூா்: புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனா். இயற்கைப் பொருள்களிலிருந்து தயாரித்த பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனா். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி இருந்து வந்துள்ளது.

ஆனால், இன்றைய சூழலில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரித்த துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த நிலையில் அடா்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

இதைத் தவிா்க்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் செய்து வருகிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com