வீட்டில் போதைப் பொருள் தயாரித்தவா் கைது

குடியாத்தம் அருகே வீட்டில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

குடியாத்தம் அருகே வீட்டில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் பிச்சனூா், நரிமுருகப்ப முதலி தெருவைச் சோ்ந்தவா் கோதண்டபாணி(45).இவா் வீட்டில் ஹான்ஸ், குட்கா, மாவா எனப்படும் போதைப் பொருள்களை இயந்திரம் மூலம் தயாரித்து அதை சிறிய பிளாஸ்டிக் கவா்களில் அடைத்து குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் நகர போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு போதைப் பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் கொட்டைப் பாக்கு,சீவல், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மற்றும் அவற்றை பேக் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவா்கள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்தபோலீஸாா், கோதண்டபாணியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com