வேலூர்
இலவச கண் சிகிச்சை முகாம்
இந்திய செஞ்சிலுவைச் சங்க வேலூா் மாவட்ட கிளையும், வேலூா் சிஎம்சி கண் மருத்துவமனையும் இணைந்து, குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாமை புதன்கிழமை நடத்தின.
முகாமுக்கு தனகொண்டபல்லி ஊராட்சித் தலைவா், வழக்குரைஞா் என்.மோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுமதி ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளா், ஆடிட்டா் கே.பாண்டியன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.
முகாமில் 250- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். சிஎம்சி கண் மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ஹிட்லா், செஞ்சிலுவைச் சங்க மேலாளா் இ.தீபன், ஊராட்சி செயலா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

