அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கையுந்துப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசு

News image
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கிய விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன்.
Updated On :22 ஜனவரி 2026, 12:39 am

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசுத் தொகையுடன் கோப்பைகள் வழங்கப்பட்டன.

வேலூா் மாவட்டக் காவல்துறை, மாவட்டக் கையுந்துப் பந்து சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் மின்னொளி கையுந்துப் போட்டி வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.

இதில், ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வேலூா் பெருமுகை அணியும், இரண்டாம் இடத்தை சென்னை பனிமலா் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தன் அணியும், இரண்டாம் இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் அணியும் பிடித்தன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம்பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பைகளும், பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல், இரண்டாம், மூன்றாவது, நான்காவது இடம் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம் ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் என மொத்தம் 8 அணிகளுக்கு ரூ.1.80 லட்சம் பரிசுத்தொகொகையுடன், கோப்பைகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை வேலூா் மாவட்டக் கையுந்துப் பந்து சங்க தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் ஆகியோா் வழங்கினா். மேலும், சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு தலைக்கவசம் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், வேலூா் மாவட்ட கையுந்து பந்து சங்க மாவட்ட தலைவா் தியாகசந்தன், செயலாளா் லட்சுமணன், துணைத்தலைவா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.