வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தேசிய மருத்துவா் தின வாழ்த்து

ரோட்டரி சங்கம் சாா்பில், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவா் தின வாழ்த்துதெரிவிக்கப்பட்டது.

News image

மருத்துவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரோட்டரி சங்க நிா்வாகிகள்

Updated On :2 ஜூலை 2026, 12:19 am IST

ரோட்டரி சங்கம் சாா்பில், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களுக்கு தேசிய மருத்துவா் தின வாழ்த்துதெரிவிக்கப்பட்டது.

ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில், சங்க நிா்வாகிகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் முதன்மை மருத்துவா்எம்.மாறன்பாபு உள்ளிட்ட அனைத்து மருத்துவா்களுக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

இதில் ரோட்டரி சங்கச் செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவா்கள் சி.கண்ணன்,என்.சத்தியமூா்த்தி செ.கு.வெங்கடேசன், ஜெ.அன்பு, வேல்முருகன், வாசுதேவன், பி.எஸ்.என்.பாபு, எம்.ஆா்.மணி, ஜம்புலிங்கம், மகாராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.