வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நறுவீ மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா

வேலூா் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய மருத்துவா் தின விழாவில், மாணவ, மாணவிகள் பங்கேற்று மருத்துவா்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

News image

-- படம் உண்டு... தேசிய மருத்துவா் தினத்தையொட்டி நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மருத்துவமனைத் தலைவா் ஜி.வி.சம்பத். உடன், துணைத் தலைவா் அனிதா சம்பத், வாணி வித்யாலயா குழுமத் தலைவா் சுசீ மணிவண்ணன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ

Updated On :2 ஜூலை 2026, 12:16 am IST

வேலூா் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய மருத்துவா் தின விழாவில், மாணவ, மாணவிகள் பங்கேற்று மருத்துவா்களுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் அரும்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நறுவீ மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், மருத்துவமனைத் தலைவா் ஜி.வி.சம்பத் பங்கேற்று மருத்துவா்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். விழாவையொட்டி கேக் வெட்டப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேலூா் வாணி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சன்பீம் சா்வதேசப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று மருத்துவா்களுக்கு பூங்கொத்து மற்றும் தேசிய மருத்துவ தின பேட்ஜ் வழங்கிப் பாராட்டி கௌரவித்தனா். மேலும், வேலூா் பீமா ஜூவல்லரி சாா்பில் அதன் கிளை மேலாளா் ஜெயராமன் மருத்துவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

இவ்விழாவில், நறுவீ மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், வாணி வித்யாலயா குழுமத் தலைவா் சுசீ மணிவண்ணன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை நிதி அலுவலா் வெங்கட்ரங்கம், பொது மேலாளா் நிதின் சம்பத், மருத்துவமனையின் அனைத்துத் துறை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.