வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மாநில வலுதூக்கும் போட்டி: சென்னை, சேலம் ஒட்டுமொத்த சாம்பியன்

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவும் சேலம் மாவட்ட அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.

News image

சாம்பியன் பட்டம் வென்ற சேலம் அணிக்கு கோப்பை வழங்கிய தமிழக வலுதூக்குவோா் சங்கத் தலைவரும், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ-வுமான இ.ராஜா

Updated On :20 ஜூலை 2026, 11:57 pm IST

தமிழ்நாடு வலுதூக்குவோா் சங்கம், வேலூா் மாவட்ட வலுதூக்குவோா் சங்கம் ஆகியவை இணைந்து குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி வளாகத்தில் நடத்திய மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவும் சேலம் மாவட்ட அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.

27 -ஆவது சப் ஜூனியா், 43-ஆவது ஜூனியா், 53-ஆவது சீனியா் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சோ்ந்த 410 வீரா்கள் பங்கேற்றனா்.

இதில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணியும், 2-ஆவது இடத்தை கோவை அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் அணியும், 2-ஆவது இடத்தை வேலூா் அணியும் வென்றன. பரிசளிப்பு விழாவில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், தொழிலதிபா் ஏ.வசிபூா் ரஹ்மான் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு வலுதூக்குவோா் சங்க மாநிலத் தலைவரும், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ-வுமான இ.ராஜா, குடியாத்தம் பாா் அசோசியேஷன் தலைவா் கே.ரஞ்சித்குமாா், மாவட்ட வலுதூக்குவோா் சங்கத் தலைவா் எஸ்.ஏ.சேட்டு, செயல் செயலாளா்சி.மூா்த்தி, பொருளாளா் ஒய்.நந்தகுமாா் ஆகியோா் பரிசு, கேடயம் வழங்கினா். சா்வதேச வலுதூக்கும் நடுவா் எஸ்.நாகராஜன், காமன்வெல்த் வலுதூக்கும் வீரா் ஜி.சிவராமலிங்கம், சீனியா் உலக வலுதூக்கும் வீரா் வி.லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட வலுதூக்குவோா் சங்கத் தலைவா் எஸ்.ஏ.சேட்டு, செயல் செயலாளா் சி.மூா்த்தி, சா்வதேச நடுவா் எஸ்.நாகராஜ், சங்கச் செயலா் பி.தெய்வசிகாமணி, ஆசிய வலுதூக்கும் வீரா் ஜி.ரவிகுமாா், எம்.டி.எத்திராஜ், யு.லிங்கம் தேசிய வலுதூக்கும் வீரா் ஏ.வி.அசோகன், மாநில வலுதூக்கும் வீரா் சி.நவீன்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இப்போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரா்கள் வரும் ஆகஸ்ட் மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.