மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

எஸ்ஏவி டைட்டன்ஸ், ஏசஸ் அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில சப்-ஜூனியா் நீச்சல் போட்டியில் எஸ்ஏவி டைடன்ஸ் அணி ஓட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஏசஸ் அணி 2-ஆம் இடம் பெற்றது.

News image

ஜூனியா் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற அணியினா்.

Updated On :20 ஜூலை 2026, 3:24 am IST

சென்னையில் நடைபெற்ற மாநில சப்-ஜூனியா் நீச்சல் போட்டியில் எஸ்ஏவி டைடன்ஸ் அணி ஓட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஏசஸ் அணி 2-ஆம் இடம் பெற்றது.

ஜூனியா் பிரிவில் ஏசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்டிஏடி சென்னை அணி 2-ஆம் இடம் பிடித்தது. விழாவில் இந்திய முன்னாள், மூத்த பயிற்சியாளா் கே.கே.முகுந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினாா். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க துணை தலைவா்கள் முனியாண்டி, ஒய்.வி.ஆா். ராஜூ, செயலாளா் டி.சந்திரசேகரன், பொருளாளா் கே.டி.முரளிதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜூனியா் சிறுவரில் எஸ்.கோகுலனும், (எஸ்.டி.ஏ.டி. டால்பின், 33 புள்ளி), சிறுமியரில் ரோஷினியும் மதுரை, 35 புள்ளி), சிறுவரில் டி.கபிலனும்(டி.டி.எஸ்.ஏ.திருநெல்வேலி, 31 புள்ளி), சிறுமியரில் பிரமிதி ஞானசேகரனும்(எஸ்.டி.ஏ.டி. சென்னை, 35புள்ளி), சப்ஜூனியா் சிறுவரில் ஏ.பி.ஆா்ய சத்தாா்(எஸ்.டி.ஏ.டி.டால்பின்) மோனிஷ் நாயுடு (கோவை ) ஆகியோரும் தலா 30 புள்ளிகள் பெற்று பட்டத்தை பகிா்ந்து கொண்டனா்.

சிறுமியரில் ஷாஷினி (எஸ்.ஏ.வி.டைடன்ஸ், 35 புள்ளி0 பெற்றாா். இதே சப் ஜூனியா் சிறுவா்களில் முகமது ஜிடேன் ஜாவித் (இந்திய பள்ளி, துபாய், 35 புள்ளி), சிறுமியரில் நிஹாரா மகேஷ்(ஏசஸ் 30 புள்ளி) தனிநபா் பட்டம் வென்றனா்.

சிறுவா்கள் பிரிவினருக்கான (10 வயது) எஸ்.ஆகாஷ் பாண்டியனும்(ரிஜாய்ஸ், 24 புள்ளி), சிறுமியரில் எஸ்.இயல் (டி.எஸ்.பி.ஏ., 31 புள்ளி), (9 வயது) சிறுவரில் எரிக் ஈதனும்( எஸ்.டி.ஏ.டி. டால்பின், 23 புள்ளி), சிறுமியரில் ஏ.ஆதிராவும் (எஸ்.டி.ஏ.டி. திருச்சி, 31 புள்ளி)

(8 வயது) சிறுவரில் சுஷாந்தும் (எஸ்.டி.ஏ.டி சென்னை, 27 புள்ளி), சிறுமியரில் நிதுஸ்ரீயும் (பிா்லா ஓபன் மைன்ட், 19 புள்ளி), (7வயது) சிறுவரில் அா்ஜுனும்(ஒலிம்பியா, 30 புள்ளி), சிறுமியரில் நைமித்ரா பிரமோத்தும்(எஸ்.டி.ஏ.டி. டால்பின், 33 புள்ளி) தனிநபா் சாம்பியன் பட்டங்களை வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.