ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 65-ஆவது தேசிய தடகள சாம்பியன் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
புவனேசுவரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டிராக்-பீல்ட் பிரிவுகளில் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.
பலம் வாய்ந்த உ.பி., ஹரியாணா, கேரள அணிகளை காட்டிலும் தமிழக அணியினா் சிறப்பாக செயல்பட்டு 9 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலத்துடன் மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றினா்.
தமிழகம் தரப்பில் நட்சத்திர வீரா் பிரவீண் சித்திரைவேல் ஆடவா் மும்முறை தாண்டுதலில் 16.92 மீ தொலைவு குதித்து தங்கம் வென்றாா்.
அதே போல் ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ் குமாா் ஆகியோரும் தத்தமது பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றனா்.
உ.பி. அணி 9 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் இரண்டாம் இடமும், ஹரியாணா 3-ஆவது இடமும், கேரளம் 4-ஆம் இடமும், மகாராஷ்டிரம் 5-ஆம் இடமும் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியால் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்: தலைமைப் பயிற்சியாளர்

டபிள்யுஆா் செஸ்: வைஷாலி சாம்பியன்

என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான்: பிரக்ஞானந்தா

குவாலியர் சீட்டாஸ் அணியை வழிநடத்தும் ரஜத் படிதார்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



