தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டு
/

குவாலியர் சீட்டாஸ் அணியை வழிநடத்தும் ரஜத் படிதார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாம்பியன் பட்டம் வென்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச டி20 லீக்கில் குவாலியர் சீட்டாஸ் அணியை ரஜத் படிதார் வழிநடத்தவுள்ளார்.

News image

ரஜத் படிதார் - படம் | குவாலியர் சீட்டாஸ் (எக்ஸ்)

Updated On :2 ஜூன் 2026, 7:23 pm IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாம்பியன் பட்டம் வென்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச டி20 லீக்கில் குவாலியர் சீட்டாஸ் அணியை ரஜத் படிதார் வழிநடத்தவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், தங்களது அணிகளுக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ள முன்னாள் கேப்டன்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா வரிசையில் ரஜத் படிதாரும் இணைந்தார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச லீக் டி20 தொடரில் குவாலியர் சீட்டாஸ் அணியை ரஜத் படிதார் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

மத்தியப் பிரதேச லீக் டி20 தொடரில் கடந்த சீசனில் குவாலியர் சீட்டாஸ் அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது. இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்போடு களமிறங்கும் குவாலியர் சீட்டாஸ் அணியை ரஜத் படிதார் கேப்டனாக வழிநடத்தவுள்ளது அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

இந்த சீசனில் குவாலியர் சீட்டாஸ் அதன் முதல் போட்டியில் நாளை (ஜூன் 3) உஜ்ஜைன் ஃபல்கான்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த சீசனில் குவாலியர் சீட்டாஸ் அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் சமபலத்துடன் களமிறங்குகிறது.

Summary

Following his role in helping Royal Challengers Bangalore win the championship title, Rajat Patidar is set to lead the Gwalior Cheetahs in the Madhya Pradesh League.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.