ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் நெட் பந்துவீச்சாளர்களாக ஆகிப் நபி மற்றும் பிரின்ஸ் யாதவ் இணைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தயாராவதற்காக இந்திய அணியில் நெட் பந்துவீச்சாளர்களாக ஆகிப் நபி மற்றும் பிரின்ஸ் யாதவ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இவர்கள் இருவரையும் தவிர்த்து, குர்ஜப்நீத் சிங், ஷிவாங் குமார், சாரன்ஷ் ஜெயின் மற்றும் ஸீசன் அன்சாரி ஆகியோரும் நெட் பந்துவீச்சாளர்களாக இணைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய பிரின்ஸ் யாதவ், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் இடம்பெற்றுள்ளார். லக்னௌ அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரின்ஸ் யாதவ், 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் இடம்பெற்றுள்ளதால், மற்ற வீரர்களை அணியில் இடம்பெற வைக்க முடியவில்லை என அணித் தேர்வுக்குழுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Aqib Nabi and Prince Yadav have joined the Indian squad as net bowlers for the Test match against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்; அணியில் 3 அறிமுக வீரர்கள்!

அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 155 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

60 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு அணியில் இடமில்லையா? ஆகிப் நபிக்கு பயிற்சியாளர் ஆதரவு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



