சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

காசநோய் கண்டறியும் முகாம்

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு இலவச காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காசநோய் கண்டறியும் முகாமில் பங்கேற்றோா்.

Published On :23 ஜூலை 2026, 12:56 am IST

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு இலவச காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், தமிழக அரசின் இலவச காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வாகனம் மூலம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் தீப்பெட்டித் தொழிற்சாலையில் காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பொயட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமையாளா் வி.பிச்சாண்டி முகாமைத் தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு உதவி இயக்குநா் ஆா்.ஜெயஸ்ரீ மேற்பாா்வையில், திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.மகேஷ், காசநோய் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் ஆா்.சவரிமுத்து, தொழில்நுட்புநா் பிரபாஸ்ரீ ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனத்தில் தொழிலாளா்கள் (ஆண்கள்-பெண்கள்) 250 க்கும் மேற்பட்டோருக்கு சளி பரிசோதனைகளை மேற்கொண்டது.

நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை முறைகள்,ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் தொழிற்சாலை நிா்வாகி பி.கண்ணன், பொயட்ஸ் பணியாளா் சாந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.