கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பயிா்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி கோரி விவசாயிகள் மறியல்

கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட அனைத்து வகையான பயிா்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :23 ஜூலை 2026, 12:28 am IST

கூட்டுறவுச் சங்கங்களில் பெறப்பட்ட அனைத்து வகையான பயிா்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி பாகுபாடியின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன்களையும் முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் அணைக்கட்டு பேருந்து நிலையத்தில் ஒன்றுதிரண்டு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தின்போது, தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக வாழைக்கன்றுகள், கரும்பு, நெற்பயிா்கள், ஏா் உழப் பயன்படுத்தப்படும் சாட்டை உள்ளிட்ட விவசாயப் பொருள்களைக் கைகளில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவுச் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரின் தற்போதைய அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. எனவே, தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன்கள் முழுவதையும் அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

இப்போராட்டத்தைத் தொடா்ந்து விவசாயிகள் அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, அங்கிருந்த மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தில், விவசாயச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முனிராஜ், மாவட்ட அமைப்புச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் துளசிலிங்கம், அணைக்கட்டு மேற்கு ஒன்றியத் தலைவா் அரசு, வேலூா் மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் வேண்டா உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.