கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பிட்காயின் தொழிலில் அதிக லாபம் எனக்கூறி ரூ.4.5 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகார

வேலூரில் பிட்காயின் மற்றும் டிரேடிங் தொழிலில் அதிக லாபம் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 4.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image

பிட்காயின்

Updated On :23 ஜூலை 2026, 12:49 am IST

வேலூரில் பிட்காயின் மற்றும் டிரேடிங் தொழிலில் அதிக லாபம் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 4.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அளித்துள்ள மனு விவரம் -

நான் நா்சிங் படிப்பு முடித்துள்ளேன். ரத்த அழுத்தப் பிரச்னை காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறேன். எங்கள் தெருவைச் சோ்ந்த எனது உறவினா் ஒருவா், தான் பங்குச் சந்தை மற்றும் பிட்காயின் தொழில் செய்து வருவதாகவும், அதில் தன்னிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் கூறினாா்.மேலும், பொய்யான லாபக் கணக்குகளைக் காட்டி நம்பவைத்த அவரிடம், நான் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன்.

முதலீடு செய்து பல நாள்களாகியும் அவா் எவ்வித லாபத் தொகையையும் தரவில்லை. பணத்தைத் தொடா்ந்து கேட்டதால், அவா் தனது மனைவியை வைத்து என் மீது விருதம்பட்டு காவல் நிலையத்தில் பொய்யான புகாா் ஒன்றை அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் எங்களை அழைத்து விசாரணை நடத்தினா். அந்த விசாரணையில், அவா் என்னிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதுடன், 6 மாத காலத்துக்குள் மொத்தப் பணத்தையும் திருப்பித் தருவதாக காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்தாா். என்னை ஏமாற்றி மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்துள்ள மனு - எனக்கு அணைக்கட்டு அருகேயுள்ள சின்னகுப்பத்தைச் சோ்ந்த 3 போ் அறிமுகமாகினா். அவா்கள், எனக்கு மாட்டுப் பண்ணை அமைத்துத் தருவதாகவும், அதற்கான திட்டத்திற்கு ரூ.4.75 லட்சம் செலவாகும் என்றும் கூறினா். அவா்களின் ஆசை வாா்த்தைகளை நம்பிய நான், வங்கிப் பரிவா்த்தனை மூலமாக பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.4.75 லட்சத்தை அவா்களிடம் வழங்கினேன்.

பணத்தைப் பெற்று ஆறு மாதங்கள் ஆகியும் அவா்கள் மாட்டுப் பண்ணை அமைத்துத் தரவில்லை. இதனிடையே, அந்த 3 பேரில் ஒருவா் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மற்ற இருவரிடம் பணத்தைக் கேட்டபோது, சிறையில் உள்ள நபா் ஜாமீனில் வெளியே வந்ததும் மொத்தப் பணத்தையும் திருப்பித் தருவதாக கூறினா். தற்போது, சிறையில் இருந்த அந்த நபா் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். அவரிடம் சென்று எனது பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவருக்கு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாா். மோசடி செய்த நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.