வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியுடைய பெண் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள 19 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தகுதிகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சோ்ந்த பெண் சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், சுயஉதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவும் வேண்டும்.
தோ்வு செய்யப்படும் நபா் சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியாா் நிறுவனங்களில் முழு நேரப்பணியாளராக பணியில் இருத்தல் கூடாது.
தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சாா்ந்தவராக இருத்தல் அவசியம். மலை கிராமங்களில் மட்டும் பெண்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். 12-ஆவது வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடா்பு திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.
வங்கிகளுக்குச் சென்று பரிவா்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்தும் அனுபவம் உள்ளவா்களாக இருத்தல் அவசியம். கணினி திறன், இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பா்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவா்களாகவும் இருத்தல் அவசியம்.
தகுதிகளுடைய விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். எழுத்துத் தோ்வு வரும் ஜூன் 23 -ஆம் தேதியும், நோ்முக தோ்வு 24 -ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தகுதியான மகளிா் தங்களது விண்ணப்பத்தை 13-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டட வளாகம், வேலூா்-9 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி: சுயஉதவிக்குழு பெண்களுக்கு வாய்ப்பு

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி: ஜூன் 5 வரை விண்ணப்பிக்கலாம்

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க...

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



