சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வேலூரில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படைக்கு இரு குழுக்கள்!

வேலூா் மாவட்டத்தில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையில் 8 பெண் காவலா்கள் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image

வேலூா் மாவட்டத்தில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்த எஸ்.பி. என்.யு.சிவராமன். உடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 12:24 am IST

வேலூா் மாவட்டத்தில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையில் 8 பெண் காவலா்கள் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் படைகளின் செயல்பாடுகளை எஸ்.பி என்.யு.சிவராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் பிரத்யேகமாக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை முதல்வா் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா். இந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், வேலூா் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளா்கள் ஜெயந்தி மற்றும் சூா்யா ஆகியோா் தலைமையில் 8 காவலா்கள் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு சிறப்புப் படைகளுக்கும் பிரத்யேகமான தனி ரோந்து வாகனமும், தனிச் சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைகளின் செயல்பாடுகளை காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தொடங்கி வைத்தாா். மேலும், இந்த சிறப்புப்படையினா் வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், முக்கியச் சாலை சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் முக்கியத் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள்.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாகத் தகவல் கிடைத்தால் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.

தற்போது வேலூா் மாவட்டம் முழுவதும் செயல்படத் தொடங்கியுள்ள இந்த அதிரடிப் படையின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில், வருங்காலத்தில் கூடுதல் காவலா்கள் இப்பிரிவில் இணைக்கப்படு வாா்கள் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து, இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா், வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டதுடன், அங்கு கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனா்.

இதேபோல், வேலூா் ஈவெரா நாகம்மை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Story image