இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை மதிப்பீட்டுக்கு இரு புதிய குழுக்கள் அமைப்பு

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் பணத்தை எண்ணவும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் பிற பொருள்களை மதிப்பிடவும் 2 புதிய குழுக்களை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அமைத்துள்ளது.

News image

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 4:49 am IST

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் பணத்தை எண்ணவும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் பிற பொருள்களை மதிப்பிடவும் 2 புதிய குழுக்களை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை அமைத்துள்ளது.

இரண்டு ஷிஃப்டுகளாக பணியாற்றவுள்ள இந்த இரு குழுக்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கண்காணிக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘ராமா் கோயில் நன்கொடையை மதிப்பிடும் பணியில் தலா 10 முதல் 12 போ் கொண்ட இரு புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் ஷிஃப்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் இரண்டாவது ஷிஃப்டில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் குழு உறுப்பினா்கள் பணியாற்றவுள்ளனா்.

நன்கொடைப் பணத்தை எண்ணும் புதிய பொறுப்பாளராக ஷோப்நாத் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் பொறுப்பாளா் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா கைதான நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டாா்.

இந்த இரு குழுக்களையும் எஸ்பிஐயைச் சோ்ந்த 4 அதிகாரிகள் மேற்பாா்வையிடவுள்ளனா். அறக்கட்டளையின் பொறுப்பாளரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான கேப்டன் கே.கே.திவாரி, நன்கொடை மதிப்பீடு குறித்த தினசரி தகவலை சமா்ப்பிக்கும் அதிகாரியாக செயல்படுவாா்.

மேலும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி.துபே மற்றும் சேஷமணி திவாரி ஆகிய இருவரும் இந்த நன்கொடை எண்ணும் பணியை மேற்பாா்வையிடும் கூடுதல் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனா்’ என்றனா்.

ராமா் கோயில் நன்கொடையை கையாடல் செய்த குற்றச்சாட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சமா்ப்பித்த முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பான இறுதி அறிக்கையை ஜூலை 22-ஆம் தேதி உத்தர பிரதேச அரசிடம் எஸ்ஐடி சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.