அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு

News image
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, காட்பாடியை அடுத்த ஜாப்ராப்பேட்டையைச் சோ்ந்தவா் கவிதா (36), மாற்றுத்திறனாளி. மனு அளிக்க வந்திருந்தபோது, திடீரென ஆட்சியரின் எதிரிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்தனா்.

பின்னா் கவிதா ஆட்சியரிடம் கூறுகையில், நான் ஜாப்ராப்பேட்டை கிளையிலுள்ள அஞ்சலகத்தில் ரூ.4 லட்சம் வரை செலுத்தியிருந்தேன். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியா் ஒருவா் பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்து விட்டாா். என்னைப் போல் 20-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்துள்ளாா். இதுதொடா்பாக, காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் அளித்த மனு: கரோனா காலத்தில் இருந்து மிகக்குறைந்த ஊதியத்தில் 5 ஆண்டுகளாக பல்வேறு அரசு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மாதம் ரூ.1,000 மட்டும் சம்பளமாக கொடுத்து வருகின்றனா். எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

காட்பாடி, கல்புதூா் மக்கள் அளித்த மனு: வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் 3, 4-ஆவது வாா்டு கல்புதூா்- பள்ளிக்குப்பம் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 717 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 55 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஒடுகத்தூா் மதுரா ஓ.ராஜாபாளையம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் நதியில் மூழ்கி உயிரிழந்ததற்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் நிதி பெறுவதற்கான ஆணையை அவரது குடும்பத்தினரிடம் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மாறன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.