பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேலூா் சிறையில் காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 12:28 am IST

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ராணி அண்ணா நகரை சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(40). வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை திங்கள்கிழமை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சிறைக் காவலா் சந்தோஷ் குமாா் அழைத்து வர சென்றாா். அப்போது ராதாகிருஷ்ணன் என்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்துகிறீா்களா அல்லது காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்துகிறீா்களா என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இதனால், சிறைக் காவலா் சந்தோஷ் குமாருக்கும், கைதி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த கைதி ராதாகிருஷ்ணன் சந்தோஷ் குமாரை தாக்கினராம்.

இதுகுறித்து, ஜெயிலா் ரத்னகுமாா் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கைதி ராதாகிருஷ்ணன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.