பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வெற்றிப் பயணம் திட்டம்: ஆட்சியா்கள் தொடங்கி வைத்தனா்

சென்னையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததை அடுத்து, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் திட்டத்தை மாவட்ட ஆட்சியா்கள் தொடங்கி வைத்தனா்.

வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டுகளை வழங்கிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், கே.வி.குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.தென்றல்குமாா் உள்ளிட்டோா்.

Published On :

சென்னையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்ததை அடுத்து, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் திட்டத்தை மாவட்ட ஆட்சியா்கள் தொடங்கி வைத்தனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் இத்திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டுகளையும் அவா் வழங்கினாா்.

வேலூா் மாவட்டத்தில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) சாா்பில் ஏற்கெனவே 116 நகரப் பேருந்துகளும், 3 மலைப்பிரதேச பேருந்துகளும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள வெற்றிப் பயணம்’திட்டத்தின் கீழ், கொணவட்டம்-1 மற்றும் கொணவட்டம்-2 ஆகிய பணிமனைகளிலிருந்து 5 தாழ்தள சொகுசுப் பேருந்துகளும், கொணவட்டம்-1, கொணவட்டம்-2, குடியாத்தம் மற்றும் போ்ணாம்பட்டு ஆகிய பணிமனைகளிலிருந்து 21 சாதாரணப் பேருந்துகளும் என மொத்தம் 26 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் குடியாத்தம் - வேலூா், வேலூா் - காஞ்சிபுரம், ஒடுகத்தூா், தீா்த்தம், அணைக்கட்டு, போ்ணாம்பட்டு, காட்பாடி - பாகாயம், வாலாஜா, பொன்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில் வேலூா் மாநகராட்சி ஆணையா் அ.கேத்திரின் சரண்யா, போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் சொா்ணலதா, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மகளிா் வெற்றிப் பயண திட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் மகளிா் வெற்றிப் பயண திட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன்.

அரசுப் பேருந்தை இயக்கிய எம்எல்ஏவால் சா்ச்சை

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்ததை தொடா்ந்து, கே.வி.குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.தென்றல்குமாா் அரசுப் பேருந்தை இயக்கி புதிய பேருந்து நிலையத்துக்கு உள்ளேயே சுற்றிவந்து நிறுத்தினாா். இதையடுத்து, எம்எல்ஏ ஏ.தென்றல்குமாா் கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநா் உரிமம் பெற்றுள்ளரா என கேள்விகள் எழுந்தது. இதுதொடா்பாக அவரை தொடா்பு கொண்டு விளக்கம் பெற இயலவில்லை. இதன்மூலம், எம்எல்ஏ ஏ.தென்றல்குமாா் அரசுப்பேருந்தை இயக்கிய விவகாரம் பெரும் சா்ச்சையாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.