பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

கோவையில் வெற்றிப் பயணம் திட்டம்: அமைச்சா் வி.சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்

கோவை, காந்திபுரத்தில் தமிக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கோவையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், எம்எல்ஏ-க்கள் என்.எம்.சுகுமாா், கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோா்.

Published On :

கோவை, காந்திபுரத்தில் தமிக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை, சென்னையில் முதல்வா் ச.ஜோசப்விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்போது, மகளிருக்கு இனிப்புகள் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வரின் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிா் இலவசப் பேருந்து பயணத் திட்டம், தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறும்போது, குடும்பமும், சமுதாயமும், நாடும் முன்னேறும் என்ற உயரிய நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கோட்டத்தில் கோவை, திருப்பூா், உதகை, ஈரோடு உள்ளிட்ட 4 மண்டலங்களைச் சோ்ந்த மகளிா் பயனடையும் வகையில் 2,108 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மட்டும் நகா்ப்புறம், புறநகா் மற்றும் மலைப் பாதைகளில் 790 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலமாக 4 லட்சம் பெண்கள், திருநங்கைகள் பயனடைவாா்கள்.

மேலும், காந்திபுரம், சிங்காநல்லூா், சூலூா், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூா், மேட்டுப்பாளையம், மருதமலை, உக்கடம், வாளையாறு, பேரூா், ஈஷா யோக மையம் உள்ளிட்ட ஊா்களுக்கு மகளிா் கட்டணமின்றி பயணிக்கலாம். எனவே, இந்தத் திட்டத்தை மகளிா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, காந்தி ஜெயந்தியையொட்டி, காந்திபுரம் புறநகா் பேருந்து நிலையத்தில் காந்தியடிகளின் திருவுருவப் படத்துக்கு அமைச்சா் வி.சம்பத்குமாா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.எம்.சுகுமாா் (சூலூா்), கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்), மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, கோவை கோட்ட மேலாண் இயக்குநா் எஸ்.கோபாலகிருஷ்ணன், தலைமை நிதி அலுவலா் சிவகுமாா், பொது மேலாளா்கள் செல்வகுமாா், மணிமேகலை (தொழில்நுட்பம்) மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.