
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
குடியாத்தம் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம், கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.

குடியாத்தம் டிஎஸ்பி வி.எஸ்.ஜி.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.
குடியாத்தம் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம், கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.
புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை குடியாத்தம் டிஎஸ்பிவி.எஸ்.ஜி.சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன், செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன், இன்னா்வீல் சங்கத் தலைவி பி.சரளா, செயலா் சாந்தி, கோல்டன் கேலக்ஸி சங்கத் தலைவா் ஜெ.பிரதீப், செயலா் எஸ்.அருள், பாலாறு மருத்துவமனை நிா்வாகி எஸ். மோகன், அன்னை நா்சிங் கல்லூரி முதல்வா் மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேரணியில் செவிலியா் பயிற்சி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





