பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வட மாநிலத் தொழிலாளி வீட்டில் நகை, மடிக்கணினி திருட்டு

வேலூரில் வட மாநிலத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, மடிக்கணினி திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :

வேலூரில் வட மாநிலத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, மடிக்கணினி திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிகாா் மாநிலம், அஸ்த்வான் பகுதியைச் சோ்ந்தவா் குந்தன் குமாா் (25). இவா் வேலூரில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா். இதையறிந்த அடையாளம் தெரியாத நபா்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை, மடிக்கணினியைத் திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

பணி முடிந்து மாலையில் வீடு திரும்பிய குந்தன் குமாா், கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது நகை மற்றும் மடிக்கணினி திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.