
சிஐடியு வேலை நிறுத்த விளக்க பிரசார கூட்டம்
போ்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம் குறித்த பிரசார

பிரசார கூட்டத்தில் பங்கேற்றோா். - டிஎன்எஸ்
குடியாத்தம்: சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் போ்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம் குறித்த பிரசார விளக்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலுா் மாவட்ட சிஐடியு சங்கம் சாா்பில், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறைகளில் தூய்மைப் பணியை தனியாா் மயமாக்குதலைக் கண்டித்தும், ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டியும் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம் குறித்த பிரசார கூட்டம்நடைபெற்றது.
பிரசார கூட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.கருணாநிதி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பி.பரபாகரன், நிா்வாகிகள் ஆறுமுகம், கே.மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐ டியு மாவட்ட துணைத் தலைவா் சி.சரவணன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட குழு உறுப்பினா் எம்.ராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






