அடிப்படை வசதிகள் இல்லாத சின்னசேலம் ரயில் நிலையம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 9: அடிப்படை வசதிகள் இல்லாததால் சின்னசேலம் ரயில் நிலைய பயணிகள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது சின்னசேலம். இவ்வூரின் ரயில் நிலையம்


கள்ளக்குறிச்சி, ஜூலை 9: அடிப்படை வசதிகள் இல்லாததால் சின்னசேலம் ரயில் நிலைய பயணிகள் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
÷விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது சின்னசேலம். இவ்வூரின் ரயில் நிலையம் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
÷இந்த ரயில் நிலையம் 1929-ல் தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயங்கி வந்தன. அப்போது விருத்தாசலம்-சேலம், சேலம்-விருத்தாசலம், சேலம்-கடலூர், கடலூர்-சேலம் பாசஞ்சர் ரயில்களும், நாகூர்-பெங்களூர், பெங்களூர்-நாகூர் விரைவு பாசஞ்சர் ரயில்களும் இயங்கி வந்தன. சென்னை செல்வதற்கு ஒரு பெட்டி மட்டும் விருத்தாசலத்தில் இணைக்கப்பட்டு சென்று வந்தது.
÷இந்நிலையில் மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி 2005-ல் தொடங்கி 2007 நவம்பரில் முடிவடைந்தது. அதன் பின்னர் சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. ஏற்கெனவே மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய சேலம்-கடலூர் பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
÷அதுபோல் நாகூர்-பெங்களூர் விரைவு பாசஞ்சர் ரயிலும் இயங்கும் என அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை இயக்கப்படவில்லை.
கணினி மூலம் பயணிகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று பயணிகள் நலச்சங்கத்திற்கு கடிதம் வந்தது. ஆனால் அது ஏட்டளவில் நின்றுவிட்டது.
÷இந்நிலையில், சின்னசேலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் அல்லல்படுகின்றனர்.
சில நேரங்களில் சென்னை செல்லும் விரைவு ரயிலும், பெங்களூர் செல்லும் சிறப்பு ரயிலும் சின்னசேலம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்கின்றன. அப்போது பயணிகள் 2-வது பிளாட்பாரம் சென்று ஏறுவதற்கு நடைமேம்பாலம் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
÷ரயில் நிலையத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. ஆனால் அது காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. 6 இடங்களில் குடிநீர் குழாய்கள்தான் உள்ளன. தண்ணீர் வருவது கிடையாது. கழிவறை கட்டடம் மட்டும்தான் உள்ளது. செயல்பாட்டில் இல்லை. இது கட்டணக் கழிவறையாக செயல்பட்டால்கூட பயணிகள் பயனடைவார்கள்.
÷ரயில் நிலையத்தில் 36 மின் கம்பங்கள் உள்ளன. அதில் சில கம்பங்களில் மட்டும்தான் விளக்குகள் எரிகின்றன.
÷ரயில் வருகை மற்றும் காலதாமதம் பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தின் நடைபாதை மேற்கூரை சிறிய அளவில் ஒருபகுதியில் மட்டுமே உள்ளது. பிற இடங்களில் நின்று ரயில் ஏறும் பயணிகள் வெயில் மற்றும் மழையின்போது அவதியுறுகின்றனர்.
÷இதுகுறித்து பயணிகள் நலச் சங்கத் தலைவர் உஷா முருகேசன் கூறுகையில், 2,3-வது நடைமேடையில் மங்களூர் விரைவு ரயில் நிற்கும்போது முன்னும் பின்னும் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கின்றன. இதனால் பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த 2,3-வது நடைமேடை நீளத்தை அதிகப்படுத்த வேண்டும்.
÷சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வசதியும் இல்லை. கட்டண வசதியுடன் கூடிய நிறுத்துமிடம் இருந்தால் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம், மருத்துவமனை செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்றார்.
÷தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் கோரிக்கையை நிர்வாகம் கவனிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...