சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பரிசல்களில் தேவை பாதுகாப்பு உபகரணங்கள்

கோபி, ஜன. 30: கொடிவேரி அணைப் பகுதியில் உள்ள பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.   தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:11 am

யதீஷ் யாதவ்

கோபி, ஜன. 30: கொடிவேரி அணைப் பகுதியில் உள்ள பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

  தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொடிவேரி அணை திகழ்கிறது. ஈரோடு மாவட்டத்தின் பெரிய அணையான பவானிசாகர் அணையில் மக்கள் குளிப்பதற்கு போதுமான வசதிகள் கிடையாது.

  ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கொடிவேரி அணை, சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில் அமைந்துள்ளது.

  இதனால், விடுமுறை நாள்களில் ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.

  மேலும், இந்த அணையில் பல லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு விடப்படுகிறது.  கடந்த 26-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அணையில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.  கொடிவேரி அணையை முழுவதும் சுற்றிப் பார்க்கும் வகையில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

  பரிசலில் சென்று அணையை ரசிக்கும் பலர், உற்சாக மிகுதியால் நடனமாடுகின்றனர். மேலும், புகைப்படம் எடுக்கும்போது அலட்சியமாக உள்ளனர்.  பரிசல்களில் ரப்பர் டியூப் வளையம் உள்ளிட்ட உயிர்காக்கும் சாதனங்கள் இல்லாததால், விபத்து நேரிட்டால் சுற்றுலாப் பயணிகளைக் காக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

  எனவே, விலைமதிப்பு மிக்க உயிர்களைக் காக்கும் வகையில், கொடிவேரி அணையில் இயக்கப்படும் பரிசல்களில் பாதுகாப்பு உபகரணங்கள் வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.